துணைவேந்தர்களை அரசே நியமிக்க ஆளுநர் எதிர்ப்பு
பல்கலை. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது மானியக்குழு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி மசோதா குறித்து விளக்கமளிக்க தலைமைச்செயலருக்கு ஆளுநர் கடிதம்;
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசை நியமிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் நான்கு மாதங்களாக இம்மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்திற்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். அத்துடன் துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.