விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடம் - தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்

குமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடத்தை தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்.

Update: 2022-01-22 06:46 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம் உள்ளது. இதன் வளாகத்தில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் சுவாமி விவேகானந்த கலையரங்கம் மற்றும் அன்னபூர்ணா உணவரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில், திறப்புவிழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட இரு தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற விவேகானந்தா கேந்திரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News