3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை 3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு;

Update: 2021-06-06 03:15 GMT

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது . தமிழகத்தில் ஐ ஏ எஸ் அதிகாரிகளை தொடர்ந்து , 46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது

அதன்படி , திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி யாக பணியாற்றி வந்த அரவிந்த் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருச்சி மாநகர துணை கமிஷனராக பணியாற்றி வந்த பவன்குமார், திருவண்ணாமலை மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக பணியாற்றி வரும் சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் மாவட்ட எஸ் பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

ராணிப்பேட்டை எஸ்பியாக பணியாற்றி வந்த சிவக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய ஓம்பிரகாஷ் மீனா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட் டுள்ளார்.

Tags:    

Similar News