தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.;
தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வார்கள். இந்த தீபாவளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. வார நாட்களில் வந்தால் மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கும். இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் மீண்டும் பணிக்கு திரும்ப ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் 13ம் தேதி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாளான 13.11.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.