நல்ல டியூன் போடுவது எப்படி? இசையமைப்பாளர் இளையராஜா டிப்ஸ்

இசையமைக்கும் போது தேவையில்லாத ஒலியை நீக்கிவிட்டால் நல்ல பாடல் கிடைக்கும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.;

Update: 2023-02-10 11:15 GMT

பைல் படம்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற 34-வது அனைத்திந்திய கலாச்சார கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து விழா மேடையில் பேசுகையில், ஒரு சிற்பி சிலையை வடிவமைக்கும் போது எப்படி தேவையில்லாத பகுதிகளை நீக்கிவிட்டு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அது போலவே, இசையமைக்கும் போது தேவையில்லாத ஒலியை நீக்கினால், மக்கள் ரசிக்கும் வகையில் நல்ல பாடல் கிடைக்கும் என்றார்.


முன்னதாக கலை கூடல் நிகழ்வை தொடங்கி வைக்கும் விதமாக, ஜனனி… ஜனனி… ஜகம் நீ… எனும் பாடலை பாடி அரங்கத்தில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் தன் மொபைல் மூலமாக தனது சொந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இருப்பவர்களை தொடர்பு கொண்ட இளையராஜா பாடல் ஒலிப்பதிவில் சில திருத்தங்களையும் செய்யுமாறும் அறிவுறுத்தினார். இது அரங்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கே சென்று அவர் இசையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், பொதுமக்களும் இதை கண்டு ரசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News