தாறுமாறாக எகிறிய தங்கம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்
தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது.;
தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு உள்ளேயே இருந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது.
அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நவம்பர் 11-ம் தேதி 1 பவுன் தங்கம் ரூ.39240 ஆக உயர்ந்தது. டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் ரூ.40,160-க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.41,040 ஆக விற்கப்பட்டது.
அதன்பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 9-ம் தேதி பவுன் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.42,080-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5345-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5380-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.