விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;

Update: 2021-09-10 03:16 GMT

 மத்திய இணையமைச்சர் எல். முருகன்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

வினை தீர்ப்பார் விநாயகர் என்னும் அடைமொழிக்கேற்ப அனைவராலும் போற்றி வணங்கக்கூடியவர் விநாயக பெருமான். முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் அவதரித்த இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News