விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாட தடை
தனி நபர்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம், வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யலாம்;
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தனி நபர்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், தங்களது வீடு அருகில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.