எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மேலும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் ரமேஷ், கார்த்தி, ஆதரவாளர்கள் கே.சி.பரமசிவம் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.;
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருங்களத்தூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது அதனைத் தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் ரமேஷ், கார்த்தி, ஆதரவாளர்கள் கே.சி.பரமசிவம் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த போது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.