'மார்ச் 7ம் தேதி முதல் முழுமையான நேரடி விசாரணை' சென்னை ஐகோர்ட்டு

‘மார்ச் 7ம் தேதி முதல் முழுமையான நேரடி விசாரணை’ நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிவித்து உள்ளார்.;

Update: 2022-03-04 14:00 GMT

சென்னை ஐகோர்ட்டு (பைல் படம்)

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளை ,மாவட்ட நீதிமன்றங்களில் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக நேரடி வழக்கு விசாரணைகள் முழு அளவில் நடைபெறவில்லை. பல வழக்குகள் ஆன்லைன் மூலமாகவும் அத்தியாவசிய வழக்குகள் நேரடியாகவும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் தனபால் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மார்ச் 7ஆம் தேதி முதல் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் முழுமையான விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News