தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் இலவச பேருந்து சேவையை எதிர்க்கட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-28 10:30 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1 ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொடுத்த வெற்றியே எனக்கு பரிசு என்றும், தொண்டர்கள் ஆடம்பரம் இல்லாமல் பயனுள்ள வகையில் நலத்திட்டங்களை வழங்க மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று ஒரு நாள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா சேவையை தொடங்கி வைத்தார்.

மேலும் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தை போல அங்கும் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என கூறியிருந்த நிலையில் இன்று புதுச்சேரி - பாகூர் தனியார் பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News