இந்திய அஞ்சல்துறை பெயரில் சமூக வலைதளங்களில் மோசடி: மக்களே உஷார்..!

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தி குறித்து இந்திய அஞ்சல் துறை எச்சரிக்கை.

Update: 2022-04-23 14:31 GMT

இந்திய அஞ்சல்துறை மூலமாக அரசு மானியம் வழங்கப்படுவதாக வாட்ஸ்-அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழிகள் மூலம் போனஸ் மற்றும் பரிசுகள் வழங்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் இந்திய அஞ்சல்துறை ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த போலியான செய்திகளை நம்பி பிறந்த தேதி, பிறந்த ஊர், வங்கி கணக்கு எண், கடவுச் சொல் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அஞ்சல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகவலை முதன்மை அஞ்சல்துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News