பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-04-03 12:29 GMT

கள்ளக்குறிச்சி, தீர்தால் நகர்,பகுதியில் வசித்து வருபவர் கதிரவன் (வயது 45) இவர் ஐ.டி. 2துறையில் பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர் இன்று விடுமுறை என்பதால் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு வந்து தனது மகன் சந்திரவதனன் (12 வயது, )தம்பி கார்முகில் - 40, கார்முகில் மகன் லிங்க நேத்திரன் 8 வயது - மற்றும் கதிரவன் தாயார் தமிழரசி - 60, மேலும் கதிரவனின் நண்பர், கள்ளகுறிச்சி அருகே உள்ள முடியனூரை சேர்ந்த கண்ணன் - 45, இவரது மனைவி வேதவல்லி - 40, இவர்களது மகன்கள், கிஷோர் 12 வயது, திவாகர் 6 வயது. இவர்கள் 9 பேரும், கதிரவனின் தகப்பனாருக்கு சொந்தமான மணியின் இனோவா காரில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம்,மற்றும் சமயபுரம் ஆகிய கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் நோக்கி ஊருக்கு திரும்பிய வந்தனர்.

காரை கதிரவன் ஓட்டி வந்துள்ளார். பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மலையப்ப நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இவர்கள் கருக்கு, இடது புறமாக வந்த வேறு ஒரு கார் இவர்கள் வண்டியில் மேதுவதுபோல் வந்துள்ளது, இதில் கதிரவன் ஓட்டி வந்த காரை வலது பக்கம் திரும்பியுள்ளார். இதில் சாலையின் நடுவே தடுப்பு இல்லாத பகுதியான மலையப்ப நகர் பிரிவு சாலை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வலதுபுறம் கார் திரும்பி உள்ளது.

அப்போது எதிரே பூலாம்பாடியில் இருந்து திருச்சிக்கு நெல் ஏற்றிக்கொண்டு வந்த வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கர சத்தத்துடன் மோதியதில் காரில் பயணம் செய்த, கார்முகில் அவரது மகன் லிங்கநேத்திரன் ,மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள், மேலும் கதிரவன், தமிழரசி, வேதவல்லி, சந்திரவதனன் கிஷோர் , திவாகர் ஆகிய 6 பேரும் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இதில் சிகிச்சை பலனின்றி தமிழரசி உயிரிழந்தார்,

மேலும் சந்திரவதனன் கிஷோர் ஆகிய இரண்டு சிறுவர்களும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், இதில் கதிரவன், வேதவள்ளி திவாகர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இறந்தவர்களின் 4 பேர் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து, காரை ஓட்டி வந்த கதிரவன் இடம் விபத்து நடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News