தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டார்
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலம் மீது "குற்றவியல் முறைகேடு" மற்றும் "கிரிமினல் முறைகேடு" குற்றச்சாட்டின் பேரில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்து . கடந்த செப்டம்பர் 27 சென்னை கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியஅலுவலகம், சென்னை மற்றும் சேலத்தில் உள்ள வெங்கடாசலத்தின் வீடுகள் உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தியது.
13.5 லட்சம் நிகர ரொக்கம், 6.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் (2.5 கோடி ரூபாய்) மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.