பன்னீர்செல்வத்துக்கு கூலிக்கு வேலை செய்யும் மருது அழகுராஜ்- மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி..!
Former Minister - நமது அம்மா நாளிதழில் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், பன்னீர்செல்வத்திடம் கூலிக்கு வேலை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.;
Former Minister - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், அ.தி.மு.க பொதுக்குழு செயல்பாடுகள் குறித்தும் நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் அழகு மருதுராஜ் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்,அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்கள் அளித்த பரபரப்பு பேட்டி: நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் மருது அழகுராஜ். இவர், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி பேசியதால் தொண்டர்கள் கோபமடைந்து உள்ளனர்.
பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து, மருது அழகுராஜ் கூலிக்கு வேலை செய்து வருகிறார். அதனடிப்படையில் தான் கொடநாடு சம்பவம் குறித்து மருது அழகுராஜ் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்.எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்தார். எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் குற்றவாளிகள் பிடிபட்டனர் என்பதே உண்மை. ஆனால், அவர்களை திமுகவினர் தான் ஜாமீனில் எடுத்ததாக புகார் எழுந்தது. இவ்வாறு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2