654 % கூடுதலாக சொத்துக்குவிப்பு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் வீரமணி ரூ.90 கோடி வரி ஏய்ப்பு, வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்துக்குவிப்பு.

Update: 2021-09-16 08:25 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.90 கோடி வரி ஏய்ப்பு நடந்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த வீரமணி. இவர் அமைச்சராக இருந்த சமயத்தில் கடந்த 2011 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடிக்கு மேல் வீரமணி சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை 6.30 மணியில் இருந்தே மாநிலம் முழுவதும் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

சென்னையில் மட்டும் நான்கு இடங்களிலும், மேலும் வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். மேலும், பெங்களூரிலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையானது நடக்கிறது,

முன்னதாக அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது கே.சி.வீரமணி வீடு மற்றும் ஆதரவாளர் வீடு என 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ரூ.90 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News