குன்னூரில் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல்: பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-11-12 07:05 GMT

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர். 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வனப்பகுதியிmhருந்து சிறுத்தை வெளியேறி விமலா என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனையடுத்து மக்கள்  தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறையை சேர்ந்த முரளி, குட்டி கிருஷ்ணன், கண்ணன், விஜயகுமார், வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார், திருநாவுக்கரசு உட்பட 7 பேரை  சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு  ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சிறுத்தை பிடிக்கப்படாததால் குன்னூர் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.  

Tags:    

Similar News