மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை நகரை மழை புரட்டிப் போட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

Update: 2021-11-07 07:00 GMT

சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட, முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை நகரில் 2015ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மழை உலுக்கியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இன்றும் மழை தொடர்கிறது. சென்னையில் பெய்த கனமழையால், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டுக்கு பின் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் நகர்ப்பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், மின் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். சென்னை எழும்பூர், புரசைவாக்கம், டவுட்டன், பட்டாளம், ஓட்டேரி நல்லாங்கால்வாய், அயனாவரம், பாடி மேம்பாலம், கொளத்தூர் பாபா நகர், பெரம்பூர் பேப்பர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளை , முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, தேங்கியுள்ள வெள்ளத்தை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும்படி, மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். முதவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News