கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

Fireworks accident: திருவள்ளுர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.;

Update: 2023-10-22 06:16 GMT

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

Fireworks accident: திருவள்ளுர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்,  ராமரெட்டிபாளையம் அருகே பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது சாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளை வெடித்தப்படியே சென்றனர். இந்நிலையில் திடீரென வான வேடிக்கையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு மூலம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது வேகமாக பரவியது. பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீயானது அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி நெருங்குவதையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பட்டாசு கடைகள் வைப்பதற்கும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News