ஃபைபர் இணைய சேவைக்கு பங்குதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். வட்டத்தில் உள்ள குறிப்பிட்ட நகர மற்றும் கிராமப் பகுதிகளில், ஃபைபர் இணைய வசதி (FTTH) மற்றும் அதன் தொடர்புடைய மற்ற சேவைகளை வழங்குவதற்காக, வருவாய் பகிர்வு அடிப்படையில், பங்குதாரர்களாக பதிவு செய்வதற்கு, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் / கேபிள் டிவி ஆபரேட்டர்கள்/ தனிநபரிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.03.2022.
இது தொடர்பான விவரங்களை www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவகத்தில் உள்ள எஃப்.டி.டி.ஹெச். தொடர்பு அதிகாரி அல்லது தலைமை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம், சென்னை அலுவலகத்தில் உள்ள எஃப்.டி.டி.ஹெச். அதிகாரிகளை 9449500580, 9486103800 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட உதவி பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.