கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடிக்க மத்திய அரசு தடை
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்;
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் மீன்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்கக் கொண்ட வரப்பட்ட இச்சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் முதல் அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி வரை அதாவது 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்.
இந்த தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி வரை அதாவது 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும். இக்காலத்தில் தங்களின் விசைப் படகுகளை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் ஆயத்தப் பணிகளில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு ஒவ்வொரு மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வழங்கி வருகிறது.