"இன்றைய சிந்தனை"..( 05.04.2022) 'இன்பமும், துயரமும்...!"
வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை...;
வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை...
மேடு,பள்ளங்கள் இருப்பதுபோல..மனிதனுக்கும் இன்ப, துன்பம் இரண்டுமே மாறி மாறி வருவது இயல்பு...
மின்சாரத்தில் ''positive, negative'' என்ற இரண்டும் இருந்தால்தான் ஒளியை நாம் பெற முடியும்...
இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி,தோல்வி என அனைத்தும் கலந்திருப்பதுதான் வாழ்க்கை...
வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை...
செல்வந்தனாகவே இருந்தால் கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது...
பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், ''அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க.''. என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு...
ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளை கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம்.
அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..)
பெரும்பாலானோருக்கு ''ஸ்டீவ் ஜாப்ஸ்'' என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள்தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்துக் கொண்டவர் அல்ல...
தனது அயராது உழைப்பால், எண்ணற்ற தடைகளை, தோல்விகளை கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதார ரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளார். இது பலரும் அறியாத உண்மை...
வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டு உள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்...
ஆம் நண்பர்களே...!
வாழ்க்கையில் நமக்கு வரும் , துன்பங்கள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர் கொள்ளும் போது நாம் எப்படி செயல் படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது வெற்றியும், தோல்வியும்...
நமக்கு ஏற்படும் துயரங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்...
''How You make it'' என்பதைவிட., ''How you take it'' என்பதுதான் முக்கியம்.
வெற்றிப் பெற எண்ண செய்ய வேண்டும் என்று ஆழ்ந்துசிந்திக்க வேண்டும்...
புரட்சிகரமாக செயல்களை செய்து,வெற்றிப் பாதையை நோக்கி சென்று வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும்...
-உடுமலை சு தண்டபாணி✒️
💐💐💐🙏🏻🌹🌹🌹