தமிழக அரசின் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்: இணையவழி பயிற்சி

தொழில் முனைவோர்கள், அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறும் வழிமுறைகளையும், பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகளையும் தெரிந்து கொள்ளலாம்.;

Update: 2021-12-09 02:45 GMT

Independence Day Drama in Tamil

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 11.12.2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சியாக தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளனர்.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் / பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்' திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படுகின்றன.

எனவே இந்த பயிற்சி முகாம் மூலம் அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082 , 8668102600, 9444557654.

Tags:    

Similar News