தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியாயத்தில் வேலை வேலைவாய்ப்பு

மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது

Update: 2022-04-24 07:36 GMT

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. தகுதியுடையோர் 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை http://tnpcb.gov.in/pdf_2022/ApplicationFormMS.docx என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது அறிவியல் சார்ந்த ஏதேனும் துறையில் முதுநிலை பட்டம் பயின்றவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணி மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் அமலாக்கம் செய்யும் பணியில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



 


Tags:    

Similar News