தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்: அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்பு

Election Commission Consultative Meeting: Participation of all District Heads of Government

Update: 2021-09-15 17:17 GMT

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார், தலைமையில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 2021 மற்றும் 28 மாவட்டங்களில் கோவிட் – 19 தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ. சுந்தரவல்லி, மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பிரவீன். பி நாயர், காவல் உதவி தலைவர் (தலைமையிடம்) முனைவர் எம்.துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News