தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டது: தேர்தல் ஆணையர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலகிக்கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தகவல்
தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணைய ஆணையர் பழனி குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
தமிழகத்தில் 19 ஆம் தேதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்