தலைமைச்செயலகத்தில் உயிரிழந்த பெண் காவலருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தலைமைச்செயலகத்தில் மரம் சாய்ந்து விழுந்து உயிரிழந்த பெண் காவலருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை தலைமைச்செயலகத்தில் மழை காரணமாக இன்று வேறோடு மரம் சாய்ந்து விழுந்தது. இதில் சிக்கி பாதுகாப்பு பணியிலிருந்த கவிதா என்ற காவலர் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் காவலருக்கு எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று காலை, சென்னை, தலைமை செயலகத்தில் பெரியமரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் பணியில் இருந்த பெண் காவலர் கவிதா மரணமடைந்தார் என்ற துயர செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.