அ.தி.மு.கவில் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கம்: தேர்தல் ஆணையத்தில் பகீர் புகார்..!

அ.தி.மு.க., கட்சியில், பதவியை பிடிக்க உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி புகார் அளித்தார்.

Update: 2022-06-24 12:34 GMT

இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  (கோப்பு படம்).

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் எஸ்.கே. சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அதிமுக தலைமையை பிடிக்க கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். மேலும் இதுதொடர்பாக அவர் மீதான புகாரை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை அலுவலரை நியமித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது. உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக டி.ஜி.பி, ஆவடி காவல்துறை ஆணையர், ஆவடி துணை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு தரப்பட்டுள்ளது. இவ்வாறு, வழக்கறிஞர் எஸ்.கே சாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News