மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி- காரணம் என்ன?
சென்னையில் உள்ள மருத்துவமனையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான, பொது மருத்துவப் பரிசோதனைகளுக்காக, சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடலிறக்க சிகிச்சை செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.