ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும்: அமைச்சர் கிண்டல்

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும் என மகாராஷ்டிர அமைச்சர் கிண்டலாக தெரிவித்துள்ளார்

Update: 2021-10-24 00:45 GMT

மகாராஷ்டிரா அமைச்சர் சாகன் புஜ்பால்

தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் சாகன் புஜ்பால் ஒரு கூட்டத்தில் பேசுகையில், குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஏராளமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன, ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பதிலாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை,  ஷாருக்கானை குறிவைக்கிறது என  குற்றம் சாட்டினார்.

மேலும் நடிகர் பாஜகவில் சேர்ந்தால் "போதைப்பொருள் சர்க்கரை தூளாக மாறும்" என்று கிண்டலாக கூறினார்.

Tags:    

Similar News