வயிற்றின் இடது பக்கம் தாங்க முடியாத வலி ஏற்படுவதற்கு காரணம் தெரியுமா?
Left Side Stomach Pain in Tamil-வயிற்றின் இடது பக்கம் தாங்க முடியாத வலி ஏற்படுவதற்கு காரணம் தெரியுமா?என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.;
Left Side Stomach Pain in Tamil-நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு வயிறு. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அதாவது தலை தான் முக்கியமான உறுப்பு என்பதை தான் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகிறது. தலை என்ன தான் முக்கியமான உறுப்பாக இருந்தாலும் நாம் உயிர்வாழ்வது வயிற்றிற்காக தான். பசி இல்லை என்றால் ஒரு மனிதன் உயிர்வாழ்வதே கடினமாகும். உழைப்பதெல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றிற்காக தான் என கூறுபவர்களும் உண்டு. அந்த வகையில் வயிறும் நமது உடலின் மிக முக்கியமான ஒரு பாகமாகும்.
வயிறு பிரச்சினை இல்லாமல் இருந்தால் தான் நமது உண்ணும் உணவு நன்றாக செரிமானம் ஆகும். தேவையற்ற கழிவுகளை மலக்குடலிற்கு வெளியேற்றும். வயிற்றில் ஏற்படும் வலிகள் ஏதாவது பெரிய நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆக வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் நோயின் அறிகுறிகள் பற்றி பார்ப்போமா?
வயிற்றின் இடது பக்கம் கடுமையான வலி ஏற்படுகிறதா? நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர்ப்பையில் அழற்சி இருந்தாலும் அடிவயிற்றில் வலி ஏற்படும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிறு நீர் பாதையில் தொற்று இருந்தால் அடிவயிற்றில் இடது பக்கம் தொடர்ந்து வலி ஏற்படும். அப்படி வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நமது உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
குரோன் டிசீஸ் (Crohn's Disease) என்ற நோயின் முக்கிய அறிகுறி அடிவயிற்றின் இடது புறம் கடுமையான வலி ஏற்படுவதாகும். குடலில் ஏற்படும் அழற்சியால் இந்த நோய் ஏற்படுகிறது.
வாய்வு காரணமாக வயிற்றில் பிரச்சினை ஏற்படுவதாலும், மலச்சிக்கலினாலும் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது.
கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது என்றால் சிசு கருப்பையில் வளராமல் இடது பாலோப்பியன் குழாயில் வளர்கிறது என்று பொருள். இப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
ஒரு நோய் வந்தபின் மருத்துவம் பார்ப்பதை விட அறிகுறி தெரியும் போதே தடுப்பது தான் புத்திசாலித்தனம். அதாவது வரும் முன் காப்பதே சிறந்தது. அந்த வகையில் வயிற்று வலி கொடுமையான ஒரு நோய். ஒருவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருக்கிறது என்றால் உடனடியாக மருத்துவரைஅணுகுவது சிறந்தது. ஏனென்றால் வயிற்று வலியை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே போல் வயிற்றின் இடது பக்கம் வலி இருக்கிறது என்றால் உடல் நலத்தின் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். அப்படி உடலில் என்ன பிரச்சினை இருந்தால் தொடர்ந்து இடது பக்க அடிவயிறு வலிக்கும்.
எரிச்சல் ஏற்படுத்தும் குடல் நோய் இருக்கிறது என்றாலும் அடிவயிற்றின் இடதுபக்கம் வலி ஏற்படும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதாலும் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2