உடல்களை பாதுகாக்கும் பிரீசர் பாக்ஸ் கண்டு பிடித்த தமிழர் பற்றி தெரியுமா?

உடல்களை பாதுகாக்கும் பிரீசர் பாக்ஸ் கண்டு பிடித்த தமிழர் பற்றி தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

Update: 2024-04-22 11:01 GMT

பிரீசர் பாக்ஸ் கண்டு பிடித்த டாக்டர் சாந்தகுமார்.

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய குளிர்சாதன பெட்டி பிரீசர் பாக்ஸ் என அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த பெட்டியின் பயன்பாடு தற்போது குக்கிராமங்கள் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிணவறை உறைவிப்பான் பெட்டி என்றும் இதற்கு இன்னொரு பெயர் உண்டு. 1996 ஆம் ஆண்டில் சென்னையை சேர்ந்த சாந்த குமார் என்பவர் தான் இதனை கண்டு பிடித்தார். பிணவறைகளுக்கான பிரத்யேக உறைவிப்பான் பெட்டிக்கு அவர் 1999 இல் வடிவமைப்பிற்கான காப்புரிமையைப் பெற்றார். இந்த கண்டுபிடிப்பு மரணத்தின் போது, ​​குறிப்பாக அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு முன் உடல்களைப் பாதுகாக்க உதவியது.

பிரீசர் பாக்ஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாக சாந்தகுமார் இறந்தவர்களின் உடல்களை டாக்சியில்  ஏற்றிச்சென்று உரிய இடங்களுக்கு இறக்கி சென்று விடும் பணியை செய்து வந்தார். பிரீசர் பாக்ஸ் கண்டு பிடித்தற்கான ராயல்டி தொகையை சாந்த குமார் பெற விரும்பாமல் அதனை பொது உடைமை ஆக்கினார். இதன் காரணமாக அவரது யுத்தியை கையாண்டு இன்று லட்சக்கணக்கானவர்கள் பிரீசர் பாக்ஸ் தயார் செய்து தங்களது வாழ்வாதாரத்திற்கான தொழிலாக அதனை மாற்றி விட்டனர்.

பிரீசர் பாக்ஸ் தொழில் மட்டும் இன்றி சாந்தகுமார் ஆம்புலன்ஸ் சர்வீசும் நடத்தி வருகிறார். மேலும் முக்கிய விஐபிக்களின் இறந்த உடல்களை மயானத்திற்கு செல்லும் பணியையும் செய்து வருகிறார். இந்த சேவைக்காக அவர் பல விருதுகளையும் பெற்று இருக்கிறார். கவுரவ டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை வாசிகள் இவரை ஆம்புலன்ஸ் மனிதர் என்றே அழைக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இறந்ததும் அவர்களது உடல்களை மெரீனா கடற்கரை வரை தனது ஆம்புலன்சில் தான் எடுத்து சென்றுள்ளார்.‘

மேலும் மறைந்த நாட்டிய பேரோளி நடிகை பத்மினி, நடிகர் திலகம் சிவஜி கணேசன், நடிகர் விக்ரம் ஆகியோரது உடல்களும் இவரது ஆம்புலன்ஸ் வாகனத்தில் தான் தங்களது இறுதி யாத்திரையை நிறைவு செய்துள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும். பிரீசர் பாக்ஸ் கண்டு பிடித்தது ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது.

Tags:    

Similar News