திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் பாண்டியன் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டியன் அறிவித்துள்ளார்.