நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்கள்.;

Update: 2022-02-22 14:41 GMT

தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு இந்நேரம் வரை கிட்டத்தட்ட 90 சதவீதம் வெளியிடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மிகப் பெரும்பான்மையான வெற்றியை அடைந்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (22.2.2022) முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் ஆ. ராசா, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News