பொங்கலுக்கு மளிகைத் தொகுப்பு வழங்கல்: அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம்
உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொங்கலுக்கு மளிகைத் தொகுப்பு வழங்கல், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயலாக்கம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று (7.12.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் உத்தரவுப்படி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம் , உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வே.ராஜாராமன், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் அ.சிவஞானம், நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலாண்மை இயக்குநர் மா.சௌ.சங்கீதா, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் ஆபாஷ் குமார், உள்ளிட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.