நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது : ஏன் தெரியுமா?

பொது வேலை நிறுத்த போராட்டத்திலர் பங்கேற்பதால் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-25 06:47 GMT

இந்தியா முழுவதும் வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தனியார் மயம் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் வங்கி ஊழிர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

இந்த அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுடமையாக்கப்பட்ட 73 ஆயிரம் வங்கி கிளைகளில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் பங்கேற்பார்கள் என்பதால் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வங்கிகள் செயல்பட முடியாத நிலை  ஏற்படலாம். இதன் காரணமாக காசோலை பரிவர்த்தனை, ஏ.டி.எம். சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

வங்கிகளை பொறுத்தவரை நாளை இம்மாதத்தின் நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறையாகும். ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே வங்கிகளை நம்பி உள்ள வாடிக்கையாளர்கள் ,  வியாபாரிகள், தொழில் அதிபர்கள் இன்றே அது தொடர்பான பணிகளை முடித்துக்கொள்வது நல்லது.

Tags:    

Similar News