அரியலூர் அரசு வனக்காட்டில் இன்று ராணுவ விமானம் வெடித்து சிதறியதா?

அரியலூர் அரசு வனக்காட்டில் ராணுவ விமானம் விழுந்ததாக காட்டுத்தீ போல் செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-28 11:52 GMT

ராணுவ விமானம் வெடித்து சிதறியதாக பரவிய செய்தியை தொடர்ந்து அரியலூர் அரசு வனக்காட்டில் ஏராளமானவர்கள் வாகனங்களில் குவிந்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் மற்றும் வங்காரம் பகுதியில் உள்ள அரசு வனக்காட்டில் இன்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டுள்ளனர். இதனால் ராணுவ விமானம் விழுந்ததாக தகவல் காட்டுத் தீயாக பரவியது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கிராம மக்களும் காட்டை சல்லடை போட்டு தேடினர்.

ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மூன்று 108 ஆம்புலன்ஸ்களும் காட்டிற்கு வந்து திரும்பி சென்றது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் கேட்டபோது அதுபோல் எவ்வித விபத்துகளும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News