அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல்

Dengue Fever in Tamil -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-27 08:08 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி.

Dengue Fever in Tamil -தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் சோர்வுடன் காணப்பட்டதால் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News