தமிழகத்தில் முடிவுக்கு வருகின்றதா?முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை அமைச்சர் சூசக தகவல்

Update: 2021-06-09 10:32 GMT

கொரோனா 2 ஆம் அலை பரவலில் இருந்து தமிழகம் மெல்ல மீண்டு வரும் நிலையில், விரைவில் கொரோனா பரவலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசியின் பலனாக தமிழகத்தில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4 வாரங்களுக்கு முன்னதாக தினசரி 36 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா புதிய பாதிப்பு, தற்போது 18 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமையுடன் (ஜூன் 14) முழு ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது.

இந்த சூழலில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு ஊரடங்கு குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முயற்சியால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கொரோனா நோய் தொற்றானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னாக இருந்த கொரோனா பாதிப்பானது தற்போது சரிபாதியாக குறைந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது குறைந்துள்ளது. அதனால் கொரோனா தொற்றிலிருந்து தமிழகம் சீக்கிரமாக மீண்டு வரும் என கூறியுள்ளார். இதனால் முழு ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படும் என்பதில் அரசுக்கு உடன்பாடு இல்லாததாக தெரிகிறது. அந்த வகையில் அமைச்சர் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது குறைந்து வரும் சூழலில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News