Crime news in tamil -பத்திரிகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் குற்றச்செய்திகள்

Crime news in tamil -தமிழ் பத்திரிகைகளில் முக்கிய குற்றச்செய்திகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.

Update: 2023-09-29 17:12 GMT

தமிழ் பத்திரிகைகளில் குற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

crime news in tamilஇந்திய ஜனநாயகத்தில் ஆட்சியியல், நாடாளுமன்றம், நீதித்துறை இதற்கு அடுத்தபடியாக நான்காவது தூணாக கருதப்படுவது மீடியா எனப்படும் பத்திரிகை துறை. ஒரு காலத்தில் பத்திரிகை செய்தி மட்டுமே நாட்டு நடப்புகளை அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கும் ஒரு முக்கியமான சாதனமாக இருந்து வந்தது. காலை நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் பத்திரிகைகள் வெளிவருகின்றன.


crime news in tamilகாலப்போக்கில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது அச்சு ஊடகம் எனப்படும் பத்திரிகை துறை நலிந்து விட்டது என்றே  கூற வேண்டும். அந்த அளவிற்கு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளம் எனப்படும் நவீன தகவல் நுட்ப சாதனங்கள் இன்றைய மக்களை ஆட்கொண்டு வருகின்றன. இவற்றின் வளர்ச்சியால் மக்களிடம் பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

crime news in tamilபொதுவாக பத்திரிகைகளில் அரசியல் செய்திகள், நாட்டு நடப்பு செய்திகள், மக்களுக்கு மிகவும் பயனுள்ள செய்திகள், மருத்துவம் தொடர்பான  என எந்த வகையான செய்திகள் இருந்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றவியல் தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பதிவிட பட்டு வருகின்றன.


அதன் காரணமாக அவற்றை கிரைம் நியூஸ்  என சொல்லுகிறோம். மனிதன் என்ன தான் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் மனது ஒரு குரங்கு போன்றது தன்னை அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளால் கொலை செய்கிறான் காம இச்சையால் பெண்ணை கற்பழிக்கிறான். உல்லாசமாக வாழ்வதற்காக பணம் பொருளை தேடுகிறான். இதற்காக திருடுகிறான் இதுதான் குற்ற சம்பவங்கள்.

crime news in tamilஇந்த குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்கென்று போலீசார் இருக்கிறார்கள். போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். என்னதான் மருத்துவம் தொடர்பான அல்லது பயனுள்ள செய்திகள் கொடுத்தாலும் மனிதனின் ஆசை என்னமோ குற்ற செய்திகளை தான் அதிகம் தேடுகிறது.

crime news in tamilஏனென்றால் அவனும் மனதளவில் குற்றம் புரிவதற்கு துடித்துக் கொண்டுதான் இருக்கிறான். வாய்ப்பு கிடைப்பவன் குற்றவாளியாகிறான். வாய்ப்பு கிடைக்காதவனும், குற்றம் நிரூபிக்கப்படாதவனும் நல்ல மனிதன் ஆகிறான். இதுதான் வாழ்க்கை. அந்த வகையில் அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி சமூக வலைத்தளமாக இருந்தாலும் சரி குற்ற செயல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மனித இனம் இருக்கும் வரை குற்ற செய்திகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.

Tags:    

Similar News