தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டு திட்டம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் செயல்படுத்தப்படும்: தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன்

Update: 2022-03-24 15:53 GMT

வணிகத் திறனை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் மற்றும் புது யுக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கான டிஜிட்டல் தரவு சார்ந்த கடன் மதிப்பீட்டு முறையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு தொடங்கும். சரக்கு விநியோகங்களுக்கான பணம் தாமதமாக கிடைப்பதென்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை என்பதை அரசு உணர்ந்துள்ளதால், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை டிரெட்ஸ் தளத்தில் சேருமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆர் எஸ் ஐ எல் இயங்குதளத்துடன் (ரிசீவெபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்) அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் இணையதளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, இன்னும் ஆறு மாதங்களில் அது செயல்படத் தொடங்கும். மாநிலத்தால் நிர்ணயிக்கப்பட்ட 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய, ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கையை அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

மேலும், மாநிலத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போட்டித்திறன், உற்பத்தித்திறன் மற்றும் அணுகலை மேலும் மேம்படுத்துவதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாரியத்தை அரசாங்கம் நிறுவியுள்ளது.

மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு ஆசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் ஆணையரும் இயக்குநருமான சிஜி தாமஸ் வைத்தியன் வெளியிட்டார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 'சிறு, குறு மற்றும் நடுத்தரதப்பி தொழில் நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம்" எனும் தலைப்பில் இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவனம் சென்னையில் இன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

அறிமுக உரை ஆற்றிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவன இணை இயக்குநர் எஸ் சுரேஷ் பாபுஜி, தமிழகத்தில் 8,33,000 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், புதுச்சேரியில் 11,720 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உள்ளன என்றார்.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் சென்னை மண்டலப் பொது மேலாளர் பி ராஜாராமன், சென்னை சிட்பி பொது மேலாளர் ஏ எல் ரவீந்திரன், சென்னை ஐஓபி பொது மேலாளர் எஸ் சி மொகந்தா, தமிழ்நாடு ஸ்டார்ட் அப் புதுமைகள் இயக்கத் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோர் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் திறன், வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துப் பேசினர்.

வெற்றிகரமான தொழில்முனைவோரான ஏரோஸ்பேஸ் என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர் சுந்தரம் தமது நிறுவன வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொண்டார். மானியங்கள், திட்டங்கள், சாதனைகள், வங்கியியல் குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் நிகழ்ச்சியில் நடைபெற்றன. இறுதியாக திறந்தவெளி ஆலோசனை நடைபெற்றது.

Tags:    

Similar News