சென்னை -பசியில் சீனியர் சிட்டிசன் குடும்பம்- கொஞ்சம் கருணைக் காட்டுங்க முதல்வரே

தன்னார்வலர்களை தடுத்த போலீசார் - சொமேட்டோ, ஸ்விக்கி டீம் எல்லா ஏரியாவுக்கும் போகலாம்- தன்னார்வ குழு-வுக்கு இந்த அனுமதியில்லயா?

Update: 2021-05-24 15:43 GMT

தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்...

இன்னிக்கு காலையில் ஒரு சீனியர் சிட்டிசனிடம் இருந்து ஒரு போன் வந்தது. அவர் வீட்டில் இருக்கும் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகச் சொல்லி வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லி இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு தன்னார்வ குழுவினர் உணவு கொண்டு வந்து கொடுத்தார்களாம்.இன்று சாப்பாடு வரவில்லையாம்.பதிலுக்கு தன்னார்வ குழு போன் செய்து , மயிலாப்பூரில் இருந்து வளசரவாக்கம் வரை அனுமதிக்க முடியாது, உன் எல்லைக்குள் கொடுத்துக்கோ' அப்படீன்னு போலீஸ் சொல்லி தடுத்துட்டாய்ங்க அப்படின்னு வருத்தத்தோட சொன்னாங்களாம்.

வருவாய் இல்லா சூழலில் தொற்றும் நால்வருடன் பட்டினியாக இருக்கும் சூழல் தெரிந்து அருகில் பக்கத்து வீட்டுக்காரர் ஸ்விக்கி-யில் ஆர்டர் செய்து உணவு கிடைக்க வைத்திருக்கிறார். ஒரு வேளைக்கு 400 ரூபாய் ஆனாலும் தொற்றுக் காலத்தில் குழுவினர் கொடுக்கும் சத்தான உணவு கிடைக்காமல் மதியம் முதல் பட்டினியாம்.

அது ஏன்? சொமேட்டோ, ஸ்விக்கி டீம் மட்டும் எந்த ஏரியாவில் இருந்தும் எல்லா ஏரியாவுக்கும் போகலாம்.ஆனால் தன்னார்வ குழு-வுக்கு இந்த அனுமதியில்லை.. இத்தனைக்கும் இலவசமாக இவர்கள் செய்யும் சேவைக்கு கார்ப்பரேசன் சர்டிபிகேட் எல்லாம் கொடுத்து இருக்கிறது.என்ன பிரயோஜனம்

இப்போ மணி எட்டரை .. வீட்டை விட்டு வெளியே வர முடியாத, ஆன் லைனில் ஆர்டர் செய்ய வழியில்லாத சீ.சி.(சீனியர் சிட்டிசன்) குடும்பத்தில் இன்றிரவும் பட்டினியாம்

இது சரியா? கொஞ்சம் கருணைக் காட்டுங்க முதல்வரே!


Tags:    

Similar News