ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை: அமைச்சர் தகவல்
ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை ஆலந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
கொரோனா தொற்று உலகை விட்டு இன்னும் நீங்கவில்லை. கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக அளவில் தொற்று அச்சம் இருக்கிறது. தென் கொரியா, ரஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இன்னும் லட்சக்கணக்கில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
ஏற்கனவே கான்பூர் ஐ.ஐ.டி. மற்றும் பல மருத்துவ வல்லுனர்கள் கருத்துப்படி, ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அதில் இருந்து நாம் மீள்வதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால், 50 ஆயிரம் முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான முன்கள பணியாளர்களின் உழைப்பை செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது என்று கூறினார்