அதிமுக பொதுச் செயலாளர் ரத்து செல்லும் என நீதிமன்றம் உத்தரவு
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொதுக்குழு நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.;
கோப்புப்படம்
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொதுக்குழு நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளார் – ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.