சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: 24 வீடுகள் தரைமட்டம்
இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும். - முதல்வர் அறிவிப்பு
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகளை கொண்ட கட்டடம் இன்று இடிந்து விழுந்தது. முன்னதாக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அக்கட்டடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டாலும், அவர்களின் உடைமைகள் முழுமையாகச் சேதமடைந்ததன.
இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த முதல்வர், இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும், மற்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.