மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா பாதிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2022-01-29 08:00 GMT

வைகோ 

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, தமிழகமும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரொனா பாதிப்பால் மருத்துவனையில் சேருவதும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்புவதுமாக உள்ளனர்.

அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு, கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வைகோவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில், வைகோ தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அங்கு வைகோவுக்கு சிகிச்சை தரப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News