தமிழகத்தில் இன்று 20,911 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் மட்டும் 8,218 பேர்

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-13 13:43 GMT

பைல் படம்.

In Chennai alone, 8,218 people were diagnosed with coronavirus in a single day, according to the health department.தமிழகத்தில் இன்று கொரோனாவால் 20,911 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8,218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்-56, செங்கல்பட்டு-2,030, சென்னை-8,218, கோவை-1,162, கடலூர்-278, தருமபுரி-118, திண்டுக்கல்-122, ஈரோடு-410, கள்ளக்குறிச்சி-127, காஞ்சிபுரம்-502, கன்னியாகுமரி-538, கரூர்-69, கிருஷ்ணகிரி-270, மதுரை-599, மயிலாடுதுறை-58, நாகப்பட்டினம்-57, நாமக்கல்-228, நீலகிரி-217, பெரம்பலூர்- 82, புதுக்கோட்டை -76, ராமநாதபுரம் -102, ராணிப்பேட்டை- 484, சேலம் -426, சிவகங்கை -59, தென்காசி -153, தஞ்சாவூர்- 346, தேனி-134, திருப்பத்தூர்- 198, திருவள்ளூர்-901, திருவண்ணாமலை-289, திருவாரூர்-90, தூத்துக்குடி- 343, திருநெல்வேலி- 415, திருப்பூர் -451, திருச்சி -465, வேலூர் -369, விழுப்புரம்- 175, விருதுநகர்-293 என மொத்தம் 20,911 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியோர் 6,235 பேர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பரிசோதனையில் 1,56,402 பேர் உள்ளனர்.

இதுவரை மொத்தம்  28,68,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் 27,27,960 பேராக உள்ளது. 36,930 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News