கட்டுமானம், ரியல் எஸ்டேட் அமைப்பினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக நன்றி தெரிவித்தனர்.

Update: 2021-12-16 10:53 GMT

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன் குமார், அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எல்.சாந்தகுமார், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.யுவராஜ், பொருளாளர் எஸ்.ஜெகதீசன், பொறியாளர் சங்க செயலாளர் டி.கார்த்திக் சூர்யா, மனைத் தொழில் முகவர் சங்கம் சார்பில் எ.பாலசுப்பிரமணி மற்றும் டி.ரஜினிராஜ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

கட்டட வரைவுபட அனுமதி காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தியமைக்காகவும், விரைவாக கட்டடங்கள் கட்டுவதற்கு மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க ஒற்றைச் சாளரமுறை (Single Window System) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தமைக்காகவும் மேலும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News