பேரறிவாளன் விடுதலை குறித்து திருநாவுக்கரசர் கருத்து
பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸுக்கு மாற்று கருத்து இல்லை என, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்;
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் பேரறிவாளன் விடுதலை குறித்து கூறுகையில், 31 ஆண்டுகால போராட்டம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்துள்ளது. யாருடைய கருணையின் அடிப்படையில் அல்லாமல், சட்டபூர்வமாக அவர்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கருத்தாக இருந்தது.
இப்போது, சட்டபூர்வமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸுக்கு இதில் மாற்று கருத்து இல்லை என தெரிவித்தார்.