ஓடும் பஸ்சில் நடத்துனர் அடித்துக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

மேல்மருவத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-05-14 03:30 GMT

கோப்பு படம் 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேல்மருவத்தூர் அருகே சென்ற போது, பேருந்தில் இருந்த போதைப் பயணி ஒருவருக்கும், நடத்துனரான 54 வயதாகும் பெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது முற்றிய நிலையில், அந்த போதை ஆசாமி, நடத்துனரை சரமாரியாக தாக்கினார். அப்போது, சக பயணிகள் போதை நபரை தடுக்க முற்பட்டனர்; எனினும், அவர்களை மீறி, நடத்துனரை போதை நபர் சரமாரி தாக்கினர். இதில் நிலைகுலைந்து நடத்துனர் பெருமாள் கீழே விழுந்தார்.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது; அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே நடத்துனர் பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே, நடத்துனரை தாக்கிய போதைப் பயணி தப்பினார். அவரை தேடி வருகிறனர். உயிரிழந்த நடத்துனர் பெருமாள், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்; விழுப்புரம் பணிமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். ஓடும் பேருந்தில் நடத்துனர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News